மீண்டும் அதிகரித்த பெட்ரோலின் விலை
Singapore
Lanka IOC
Petrol diesel price
By Dharu
லங்கா ஐ.ஓ.சி நிறுவனமானது ஒரு லிட்டர் ஒக்டேன் 95 பெட்ரோலின் விலையை இன்று (04) நள்ளிரவு முதல் ரூ. 20 உயர்த்த தீர்மானித்துள்ளது.
அதன்படி, லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஒரு லிட்டர் ஒக்டேன் 95 பெட்ரோலின் விலை ரூ. 495-லிருந்து ரூ. 515-ஆக உயரும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், சினோபெக் நிறுவனமும் ஒரு லிட்டர் ஒக்டேன் 95 பெட்ரோலின் விலையை இன்று (04) நள்ளிரவு முதல் ரூ. 20 உயர்த்தியுள்ளது.
நள்ளிரவு முதல் அதிகரிப்பு
அதன்படி, சினோபெக் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஒரு லிட்டர் ஆக்டேன் 95 பெட்ரோலின் விலையும் ரூ. 495-லிருந்து ரூ. 515-ஆக உயரும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருத்தப்பட்ட விலையானது இன்று நள்ளிரவு முதல் அனைத்து லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் எரிபொருள் நிலையங்களிலும் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி