அமெரிக்க வரலாற்றில் முதல் தடவையாக ஆளுநராக கருப்பின பெண் தெரிவு
அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் ஜோர்ஜியா மாகாணத்தின் ஆளுநராக ஜனநாயகக் கட்சியின் கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன்மூலம், அமெரிக்க மாகாணத்தின் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கருப்பின பெண் என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் 435 பிரதிநிதிகள் சபை இடங்களுக்கும், 35 செனட் சபை இடங்களுக்கும், பல்வேறு மாகாணங்களின் ஆளுநர்கள், உள்ளாட்சிப் பதவிகளுக்குமான வாக்குப்பதிவு நேற்று (03) மாலை நடைபெற்றது.
54.2 சதவீத வாக்குகள்
தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஜோர்ஜியா மாகாணத்தின் ஆளுநராக ஜனநாயகக் கட்சியின் கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள வாக்குகளில் 54.2 சதவீத வாக்குகளை கீஷா லான்ஸ் பெற்றுள்ளார். எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளரும் தொழிலதிபருமான ரிக் ஜாக்ஷன் 45.8 சதவீத வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.
ஜோர்ஜியா மாகாண ஆளுநர் தேர்தலில் 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |