வாளால் வெட்டி படுகொலை - ஐவர் கைது..!
Sri Lankan Peoples
Death
By Kiruththikan
கடந்த 29ஆம் திகதி கொஸ்கம மூனுமலை தோட்டப் பகுதியில் நபர் ஒருவர் வாளால் வெட்டப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கொஸ்கம காவல்துறையினர் தெரிவித்தனர்.
கலுஅகல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக சந்தேகநபர்கள் இந்த கொலையை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹங்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி