லண்டனிலும் உருவானது கோட்டா கோ கம
இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கையர்கள் லண்டனிலும் கோட்டா கோ கம கிளை ஒன்றை ஸ்தாபித்துள்ளனர்.
லண்டனில் உள்ள பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு பின்புறம் அதன் சுற்று வட்ட பகுதியில் அவர்கள் இந்த கோட்டா கே ம கிராமத்தின் கிளையை ஏற்படுத்தியுள்ளனர்.
லண்டனில் கோட்டா கோ கம தற்போது திறக்கப்பட்டுள்ளது என பியல் பெரேரா என்ற நபர் தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்து தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கொழும்பு காலிமுகத் திடலில் கோட்டா கோ கம (கோட்டா வெளியேறு கிராமம்) கிராமம் என்று பெயரிட்டு, போராட்டகாரர்கள் போராட்டம் களம் ஒன்றை அமைந்துள்ளனர்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த 22 நாட்களாக காலிமுகத திடலில் இளைஞர், யுவதிகள் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவாக இலங்கையில் பல இடங்களில் கோட்டா கோ கம கிளைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் தற்போது வெளிநாடான இங்கிலாந்திலும் இலங்கையர்கள் கோட்டா கோ கம என்ற கிளையை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் இலங்கையில் மாத்திரமல்லது இங்கிலாந்து, இத்தாலி, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இலங்கையின் ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.
