ஊடக செய்திகளின் பின்னரா தீர்வு திட்டம்! டித்வாவால் மலையகத்தில் தொடரும் கூடார வாழ்க்கை

Sonnalum Kuttram
By Thirumal May 14, 2026 11:48 AM GMT
Report

கொத்மலை வெவண்டன் தோட்டத்தில் டித்வா சூறாவளி மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட 25 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் கடந்த ஆறு மாதங்களாக தற்காலிக கூடாரங்களில் கடும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.

மண்சரிவு அபாயத்தால் தங்களது வீடுகளை இழந்த இந்த குடும்பங்கள் ஆரம்பத்தில் பொதுமக்கள் தங்கும் இடங்களிலும் தோட்டக் கோவிலிலும் தங்கியிருந்த நிலையில், பின்னர் அரசாங்கம் ஏற்பாடு செய்த தற்காலிக கூடாரங்களில் குடியமர்த்தப்பட்டனர்.

எனினும் மழைக்காலம் மற்றும் பலத்த காற்று வீசும் நாட்களில் அந்த கூடாரங்களில் தங்கியிருப்பது மிகவும் கடினமானதாக உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

ரில்வின் சில்வாவை உடனடியாகக் கைது செய்யுங்கள் : பறந்த முறைப்பாடு

ரில்வின் சில்வாவை உடனடியாகக் கைது செய்யுங்கள் : பறந்த முறைப்பாடு

நிரந்தர வீடுகள் 

தங்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்து வழங்கவோ அல்லது பாதுகாப்பான இடமொன்றில் மீளக் குடியமர்த்தவோ அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊடக செய்திகளின் பின்னரா தீர்வு திட்டம்! டித்வாவால் மலையகத்தில் தொடரும் கூடார வாழ்க்கை | Kotmalai Wevandan Estate

இந்த குடும்பங்களுக்காக அதே தோட்டப்பகுதியில் வீடுகள் அமைப்பதற்கான நிலத்தை ஆய்வு செய்ய தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அதிகாரிகள் சென்றிருந்த போதிலும், அந்த நிலப்பகுதியும் மண்சரிவு அபாயம் கொண்டதாக அடையாளம் காணப்பட்டதால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டித்வா சூறாவளிக்குப் பின்னர் மண்சரிவு அபாயம் காரணமாக வெவண்டன் தமிழ் மகா வித்தியாலயம் முழுமையாக மூடப்பட்டுள்ளதுடன், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தற்போது கொத்மலை தொண்டமான் கலாசார மண்டபத்தில் தற்காலிகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தங்களது தோட்டப் பகுதியில் புதிய பாடசாலை ஒன்றையும் அமைத்து தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து, (13) ஆம் திகதி நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கொத்மலை பிரதேச செயலாளர் நதீர லக்மாலிடம் விளக்கம் கேட்டிருந்தார்.

அதன்போது, அந்தப் பகுதி கடும் மண்சரிவு அபாயம் கொண்டிருப்பதால் அங்கு நிரந்தர வீடுகள் அமைப்பது சாத்தியமற்றது என பிரதேச செயலாளர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, பொருத்தமான காணி ஒன்றை அடையாளம் கண்டு, நிரந்தர வீடுகள் அமைக்கப்படும் வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக வீடுகள் உடனடியாக அமைத்து வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி நுவரெலியா மாவட்ட செயலாளர் மற்றும் கொத்மலை பிரதேச செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026