இராமநாதன் கல்லூரி மாணவி மரணம் : ஆசிரியருக்கு அதிரடியாக கட்டாய விடுமுறை

Sri Lanka Police Sri Lanka Teachers
By Shalini Balachandran May 09, 2025 02:25 PM GMT
புதிய இணைப்பு

கொட்டாஞ்சேனை மாணவி உயிரிழப்பு விவகாரத்துடன் தொடர்புடைய ஆசிரியரை கட்டாய விடுமுறையில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம் தொடர்பாக காவல்துறை பீ அறிக்கை கிடைத்துள்ள நிலையில் அதற்கமைய குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கைக்கமைய குறித்த ஆசிரியரை நிறுவன கோவைச் சட்டத்தின் பிரகாரம் கட்டாய விடுமுறையில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய - பாகிஸ்தான் போர்....! இந்திய மத்திய அரசின் அதிரடி உத்தரவு

இந்திய - பாகிஸ்தான் போர்....! இந்திய மத்திய அரசின் அதிரடி உத்தரவு

ஆரம்பக்கட்ட விசாரணைகள் 

குறித்த விடயத்தை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

இராமநாதன் கல்லூரி மாணவி மரணம் : ஆசிரியருக்கு அதிரடியாக கட்டாய விடுமுறை | Kottehana School Girl Death Abuse Case Teacher

இந்தச் சம்பவம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதுடன் அந்த விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் முறையாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒட்டுமொத்த சம்பவத்திலும் ஏதாவதொரு தரப்பு அவர்களின் கடமைகளை நிறைவேற்ற தவறியுள்ளார்களா என்பது தொடர்பில் தேடிப்பார்ப்பதற்கு அமைச்சினால் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவசரமாக ஒன்று கூடிய மொட்டுக் கட்சியின் பிரபலங்கள்

அவசரமாக ஒன்று கூடிய மொட்டுக் கட்சியின் பிரபலங்கள்

கொழும்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ஜேர்மன் யுவதி

கொழும்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ஜேர்மன் யுவதி

முதலாம் இணைப்பு 

கொழும்பு இராமநாதன் கல்லூரி (Ramanathan Hindu Ladies College) மாணவியின் மரணத்திற்கு காரணமானவருக்கு உச்ச தண்டனை வழங்க வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறித்த விடயத்தை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி வித்தியா கோரமாகக் கொலை செய்யப்பட்ட போது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பல்லாயிரம் பேரை ஒன்று திரட்டி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க பேரணி நடாத்தியதை யாவரும் அறிவர்.

நீதி கேட்டு ஆதங்கத்தில் நாடாளுமன்றில் கத்திய அர்ச்சுனா எம்.பி

நீதி கேட்டு ஆதங்கத்தில் நாடாளுமன்றில் கத்திய அர்ச்சுனா எம்.பி

தலை நகர் பகுதி 

அதேபோன்று இலங்கையின் தலை நகர் பகுதி கொழும்பில் தமிழ் மாணவியொருவர் பரிதாபமாகக் கொல்லப்பட்டிருக்கின்றார்.

இராமநாதன் கல்லூரி மாணவி மரணம் : ஆசிரியருக்கு அதிரடியாக கட்டாய விடுமுறை | Kottehana School Girl Death Abuse Case Teacher

இதனை பலரும் மூடி மறைத்து குறித்த குற்றவாளிக்கு வெறும் இடமாற்றம் மட்டும் வழங்கப்பட்டிருக்கின்றது.

இராமநாதன் மகளிர் கல்லூரியில் சில ஆசிரியர்கள் இடமாற்றம் வழங்கப்பட்டாலும் ஆசிரிய சங்கத்தின் அனுசரணையோடு பல ஆண்டுகள் அங்கேயே பணியாற்றுகின்றனர், இது உண்மை.

நாட்டை உலுக்கும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் : அமைச்சர் வெளியிட்ட தகவல்

நாட்டை உலுக்கும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஆசிரிய சங்கம்

இந்த கொலைச் சம்பவத்தையும் அதே நபர்கள் மூடி மறைக்க முனைந்துள்ளனர், குற்றவாளியாகக் காணப்படுபவரும் ஆசிரிய சங்கம் ஒன்றில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்.

அதனாலேயே ஏற்கனவே இவர் இழைத்த குற்றத்திற்கு தண்டனை வழங்கப்படவில்லை இது போன்று சில மாவட்டங்களிலும் சிலர் பாதுகாக்கப்படுகின்றனர்.

இராமநாதன் கல்லூரி மாணவி மரணம் : ஆசிரியருக்கு அதிரடியாக கட்டாய விடுமுறை | Kottehana School Girl Death Abuse Case Teacher

எதுவாயினும் ஒரு பிள்ளையின் மரணத்திற்கு ஒரு ஆசிரியர் காரணமாக இருந்தால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்.

ஆகையால் குற்றவாளிக்குத் தண்டனை வழங்கப்படும் அதேவேளை உடந்தையானவர்களை வெளிப்படுத்தி அவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும், என கேட்டுக்கொள்கின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுந்து நொருங்கிய உலங்கு வானூர்தி! மீட்பு நடவடிக்கை ஆரம்பம்

விழுந்து நொருங்கிய உலங்கு வானூர்தி! மீட்பு நடவடிக்கை ஆரம்பம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026