சடுதியாக அதிகரித்த கொத்து ரொட்டியின் விலை! வேறு உணவுகளின் விலைகளும் உயர்வு
கொத்து ரொட்டி ஒன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால், 600 ரூபாவாக்கு விற்பனை செய்யப்பட்ட கொத்து ரொட்டி, நேற்று முதல் 700 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிற்றுணவக உரிமையாளர்களே இவ்வாறு தமது உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவின் விலை அதரிகரிப்பு
கோதுமை மாவின் விலை அதரிகரிப்பு காரணமாக கொத்து ரொட்டியின் விலை அதிகரிப்பட்டுள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வேறு சிற்றுணவுகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, முட்டை ரொட்டி, பராட்டா, மரக்கறி ரொட்டி மற்றும் ரோல்ஸ் உள்ளிட்ட சிற்றுணவுகளின் விலைகள் 10 முதல் 20 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் அதிகரிகக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

