குச்சவெளி பிரதேச செயலக கட்டிடம் திடீரென இடிந்து வீழ்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு
Trincomalee
Sri Lanka
By Pavi
திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலகத்தின் முன்பகுதியில் இடம்பெற்று வந்த கட்டுமானப் பணிகள் இடிந்து வீழ்ந்துள்ளன.
குறித்த சம்பவம் சனிக்கிழமை (10.10.2026) காலை இடம்பெற்றுள்ளது.
பிரதேச செயலகத்தின் முன்பகுதியில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், தூண்கள் அமைக்கப்பட்டு அவற்றின் மேல் தகடுகளைப் பொருத்தும் பணிகள் இடம்பெற்றுள்ளன.
சிலருக்குச் சிறு காயங்கள்
இதன்போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த தூண் ஒன்று சரிந்து விழுந்து இரண்டாக உடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஏனைய கட்டுமானப் பகுதிகளும் இடிந்து வீழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தின்போது கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த சிலருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்