வரிசையில் காத்திருந்த குமார் சங்கக்கார!! (படம்)
Kumar Sangakkara
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Kanna
வாகன அனுமதி பத்திரம் புதிப்பிக்க வரிசையில்
முன்னாள் கிரிக்கட் வீரர் குமார சங்ககார இன்று வாகன அனுமதி பத்திரம் புதிப்பிப்பதற்காக வரிசையில் நின்றுள்ளார்.
அவர் வரிசையில் நிற்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணத்தினால் தற்போது பொருட்கள் கொள்வனவு முதல் அனைத்துக்கும் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் குமார சங்ககாரவும் தற்பொழுது வரிசையில் நிற்கின்றார்.
குமார சங்ககார அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கு எதிராகவும் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்