கந்தையா பாஸ்கரன் மற்றும் புலம்பெயர் நண்பர்களின் முன்மாதிரி செயல்
கிளிநொச்சி பரந்தனில் நெல் உலர்த்தும் மேடைகள் அமைக்கும் பணி ஐபிசி தமிழ் ஊடக் குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் மற்றும் புலம்பெயர்ந்த நண்பர்களின் ஒன்றிணைந்த முன்னெடுப்பால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பரந்தன், குமரபுரம் விவசாயிகள் அமைப்பிடம், நெல்லை உலர்த்தும் முதலாவது மேடை அமைக்கும் முயற்சிக்கான நிதியை கையளிக்கும் நிகழ்வு நேற்று(25) இடம்பெற்றது.
முன்மாதிரிப் பணி
வீதிகளில் நெல்லை உலர்த்தும் செயற்பாடுகளில் விவசாயிகள் ஈடுபடுவதானால் ஏற்படும் ஆபத்துக்களையும் விபத்துக்களையும் தடுப்பதற்கான முயற்சியாக இவ் முன்மாதிரிப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக பரந்தனில் அமைக்கும் நெல் உலர்ந்தும் மேடையை அமைக்கும் விதமாக முதன் முதலில் ஐபிசி தமிழ் ஊடக் குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் ஒரு இலட்சம் ரூபா நிதியை குமரபுரம் விவசாயிகள் அமைப்பின் செயலாளர் கரனிடம் கையளித்தார்.
அத்துடன் பத்து புலம்பெயர்ந்த நண்பர்களின் பங்களிப்பாக ஆளுக்கு ஒரு லட்சம் ரூபா விகிதம் பத்து இலட்சம் ரூபா இதன் போது ஒன்றிணைந்து கையளிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பக்கபலமாகவும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.