புத்துயிர் பெறும் குமுதினிப் படகு..!
நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட குழுதினிப்படகு பழுதடைந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக மாவிலித்துறையில் தரித்திருந்ததுடன், திருத்தப்பணிகளுக்காக வல்வெட்டித்துறைக்கு கொண்டு செல்லப்பட்டு நீண்டகாலமாக திருத்தப்பணி மேற்கொள்ளப்படுகின்றது.
இந்நிலையில், யாழ். வல்வெட்டித்துறையில் திருத்தம் செய்யப்பட்டு வரும் குமுதினிப் படகை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
வீதி அபிவிருத்தி அதி கார சபைக்குச் சொந்த மான குமுதினிப் படகு மற்றும் வட தாரகைப் படகு என்பன, நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட நிலையில், குமுதினிப் படகு பழுதடைந்ததையடுத்து, வடதாரகைப் படகு மட்டுமே சேவையில் ஈடுபட்டு வருகின்றது.
இதனால் நெடுந்தீவிற்கான போக்குவரத்தில் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
