குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு விசாரணை : நீதிமன்றின் உத்தரவு
மட்டக்களப்பு குருக்கள்மடத்திலுள்ள மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு இம்மாதம் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு விசாரணை இன்று (09) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதவான் த.பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதி அமைச்சுக்கு அனுப்பப்பட்டது
இவ்வழக்கில் கடந்த 23.09.2025 கொழும்பு பிரதம சட்ட வைத்திய அதிகாரியினால் சமர்ப்பிக்கப்பட்டு இருந்த அகழ்வு தொடர்பான பாதீடு மற்றும் அதனுடைய விரிவாக்கம் மன்றினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் ஊடாக நிதி அமைச்சுக்கும், நீதி அமைச்சுக்கும் அனுப்பப்பட்டிருந்தது.
குறித்த வழக்கமானது செயன்முறை தொடர்பான விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராய இன்று அழைக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் குறித்த வழக்கானது எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
