குருந்தூர்மலை பொங்கல் நிகழ்வுக்கு போட்டியாக நடந்த பௌத்த வழிபாடு - தடுத்து நிறுத்தப்பட்ட தமிழ் மக்கள் (காணொளி)
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வு இடம்பெற்ற நிலையில் புதிதாக கட்டப்பட்ட விகாரையிலும் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று பொங்கல் வழிபாடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அங்கு பல சிங்கள மக்களும் பௌத்த துறவிகளும் குவிந்தனர்.
இதனைத் தொடர்ந்து, குருந்தி விகாரையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. அதேவேளை, குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைக்கு உட்பட்டு பொங்கல் நிகழ்வுகளுக்காக சென்ற தமிழ் மக்களை குருந்தூர் மலை பௌத்த பிக்கு தலைமையிலான 100 க்கும் மேற்பட்டவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மக்கள் கவலை

பொங்கல் நிகழ்வுக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்தி அச்சுறுத்திவரும் பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினருக்கு எதிராக காவல்துறையினர் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.