குருந்தூர் மலை ஆதிசிவன் ஜயனாருக்கு எதிர்வரும் 14 ஆம் திகதி பாரிய பொங்கல்
குருந்தூர் மலை ஆதிசிவன் ஜயனார் ஆலயத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதி பாரிய பொங்கல் உற்சவம் இடம்பெறவுள்ளது.
குருந்தூர் மலை விவகாரத்தில் ஆதி சிவன் ஜயனார் ஆலய வழங்கு நடைபெற்றுக்கொண்டிருந்தாலும், ஏற்கனவே நீதிமன்ற கட்டளையின் படி சைவ வழிபாடுகள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டதற்கு அமைய, எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 9.00 மணிக் குருந்தூர் மலை ஆதிசிவன் ஜயனார் இருந்த இடத்தில் பொங்கல் வழிபாடு நடைபெற ஏற்பாடாகியுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதில்அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சட்டரீதியான அனுமதி
குருந்தூர் மலையில் சைவ வழிபாட்டிற்கு நீதிமன்றம் எந்தத் தடைகளும் ஏற்படுத்தவில்லை. சட்டரீதியாக முழுமையான அனுமதியினை தந்துள்ளது.
இந்த நிலையில் குருந்தூர் மலையில் தமிழர்கள் வழிபாட்டினை மேற்கொள்ளவேண்டியதன் அவசியம் குறித்து முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், முன்னாள் விசாய அமைச்சர் க.சிவனேசன், வேலன் சுவாமி ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
குருந்தூர் மலை தொடர்பான வழங்கு விசாரணை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர் அவர்கள் ஊடகங்களுக்கு இந்தக் கருத்தினை தெரிவித்துள்ளார்கள்.