சம்பந்தன்,மாவை சேனாதிராஜா செய்த மிகப்பெரிய தவறு : கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள சிவஞானம்
இலங்கை தமிழரசுக்கட்சியில் (itak)நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர்களே கட்சியின் ஊடக பேச்சாளராக இருக்க வேண்டுமென இதுகாலவரை சம்பந்தனும்(sampanthan) மாவை சேனாதிராஜாவும்(mavai senathirajah) கடைப்பிடித்து வந்த கொள்கை முற்றிலும் தவறானது என இலங்கை தமிழரசுக்கட்சியின் தற்போதைய தலைவர் சிவிகே சிவஞானம்(CVK Sivagnanam) தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழ் களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.இந்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை தமிழரசுக்கட்சியில் எந்தவிதமான குழப்பங்களும் இல்லை. வெளியே சிலர் கதைப்பது போல் எந்தவொரு அணிமாற்றங்களும்,வேறுபாடுகளும் கட்சிக்குள் இல்லை.மத்திய குழு ஒன்றாக கூடியே முடிவுகளை எடுக்கிறது.
2018 ஆம் ஆண்டிலும் தலைவர் பதவியில் இருந்து மாவை சேனாதிராஜா விலகியிருந்தார். அவரின் பதவி விலகல் கடிதத்தை நானே மறைத்தேன்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பொதுவேட்பாளரை ஆதரித்தமை தொடர்பில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
அவர் தெரிவித்த மேலும் பல விடயங்கள் காணொளியில்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |