பலாலி விமான நிலைய அபிவிருத்தி - இந்திய அரசிற்கு வடக்கிலிருந்து செய்தி

Jaffna India Jaffna International Airport Port City Colombo
By Theepan Feb 20, 2026 10:03 AM GMT
Report

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் மிகப்பெரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அதற்காக இந்திய அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் வடக்கு மாகாண மக்கள் சார்பில் ஆளுநர் நா.வேதநாயகன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி ஆகியோர், வடக்கு மாகாண ஆளுநரை இன்று வெள்ளிக்கிழமை (20.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின்போது, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

தனது நற்பெயருக்குக் களங்கம்...! வைத்தியர் சத்தியமூர்த்தி காவல்துறையில் முறைப்பாடு

தனது நற்பெயருக்குக் களங்கம்...! வைத்தியர் சத்தியமூர்த்தி காவல்துறையில் முறைப்பாடு

உதவித் திட்டங்கள் 

குறிப்பாக, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளின் அபிவிருத்தி மற்றும் காரைநகர் படகுக் தள அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆளுநருடன் பிரதி உயர்ஸ்தானிகர் கலந்துரையாடினார்.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி - இந்திய அரசிற்கு வடக்கிலிருந்து செய்தி | Proposal For The Development Of Palaly Airport

அண்மையில் ஏற்பட்ட டித்வா பேரிடரின் பின்னரான உதவித் திட்டங்கள் குறித்தும், இந்தியாவின் 'அயலவருக்கு முன்னுரிமை' என்ற கொள்கையின் அடிப்படையிலான முன்னுரிமைகள் தொடர்பிலும் பிரதி உயர்ஸ்தானிகர் ஆளுநருக்குத் தெளிவுபடுத்தினார்.

அத்துடன், கடன்களாக வழங்கப்பட்ட சில உதவித் திட்டங்கள் தற்போது நன்கொடைகளாக மாற்றப்பட்டுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

டித்வா பேரிடரின் போது இந்திய அரசாங்கம் வழங்கிய உடனடி உதவிகளுக்கு நன்றி தெரிவித்த ஆளுநர், இந்தியாவின் தொடர்ச்சியான பங்களிப்புக்களைப் பாராட்டினார்.

பிரித்தானியாவில் உரையாற்றும் வாய்ப்பு ரத்து! நாமலுக்கு ஏற்பட்ட பெரும் ஏமாற்றம்

பிரித்தானியாவில் உரையாற்றும் வாய்ப்பு ரத்து! நாமலுக்கு ஏற்பட்ட பெரும் ஏமாற்றம்

பலாலி விமான நிலைய அபிவிருத்தி 

இந்திய அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை தொடர்பிலும், துறைசார் கௌரவ அமைச்சர் நேற்றையதினம் இது குறித்து வெளியிட்ட கருத்துக்களையும் ஆளுநர் இதன்போது நினைவுகூர்ந்தார்.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி - இந்திய அரசிற்கு வடக்கிலிருந்து செய்தி | Proposal For The Development Of Palaly Airport

பலாலி விமான நிலையத்தின் முனையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், எதிர்காலத்தில் அதன் ஏனைய விரிவாக்கச் செயற்பாடுகளுக்காக இலங்கை அரசாங்கம் விடுக்கும் கோரிக்கைகளுக்குச் சாதகமான பதிலை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் பிரதி உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

மேலும், வடக்கு மாகாணத்தில் புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்திய முதலீட்டாளர்களை இங்கு முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்குமாறு ஆளுநர் கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த பிரதி உயர்ஸ்தானிகர், முதலீட்டு வலயங்கள் தொடர்பான கொள்கை நிலைப்பாடுகள் மற்றும் வழிகாட்டல்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட பின்னர், இந்திய முதலீட்டாளர்களை நிச்சயம் வடக்கில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்க முடியும் என உறுதியளித்தார். 

யாழ். பல்கலை வரலாற்றில் சாதனை - 8 தங்க பதக்கங்களை பெற்ற மாணவி

யாழ். பல்கலை வரலாற்றில் சாதனை - 8 தங்க பதக்கங்களை பெற்ற மாணவி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015