சட்டத்தரணி மற்றும் மனைவின் படுகொலை! பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
தலங்கம காவல் பிரிவின் அக்குரேகொட பகுதியில் கடந்த 13 ஆம் திகதி சட்டத்தரணி ஒருவர் மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்காக காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
அதன்படி, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு வழிகளில் உருவாக்கப்பட்ட சந்தேக நபரின் தற்போதைய தோற்றத்தின் பல புகைப்படங்களை காவல்துறை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், சந்தேக நபர் சுமார் 44 வயதும், சுமார் 5 அடி 5 அங்குல உயரமும் இருப்பார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சந்தேக நபரின் வலது கன்னத்திற்குக் கீழே முகத்தில் வெட்டுக்காயம் இருப்பதாகவும் காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சந்தேக நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால் 071-8598008, 071-8591641 மற்றும் 071-8592279 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
காவல்துறையினரால் வெளியிடப்பட்ட சந்தேக நபரை சித்தரிக்க AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே உள்ளன








செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |