போர் பதற்றம் - உக்ரைன் தலைநகரில் ஊரடங்கு
போர் அவசர நடவடிக்கையாக உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் ஊரடங்கு அறிவிக்கப்படுவதாக அம்மாகாண மேயர் விட்டலி கிளிட்ச்கோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக விபரித்துள்ள அவர், "நண்பர்களே! கீஃப் நகரில் இன்று முதல் ஊரடங்கு அறிமுகப்படுத்துகிறது. இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை அது அமுலில் இருக்கும்," என்று தெரிவித்தார்.
"இராணுவ ஆக்கிரமிப்பாளர்களின் நடவடிக்கைக்கு மத்தியில் உக்ரைனில் இராணுவ சட்டம் நடைமுறையில் உள்ளமை தலைநகரின் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பிற்கு அவசியம்" என்று கிளிட்ச்கோ கூறினார்.
மேலும் நிர்வாகம், இராணுவ கட்டளை மற்றும் சட்ட அமுலாக்கம் ஆகியவற்றின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவின் போது பொது போக்குவரத்து இயங்காது என்றும் மெட்ரோ நிலையங்கள் தங்குமிடங்களாக 24 மணி நேரமும் பயன்படுத்தலாம் என்று கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவின் போது அனைத்து ஊழியர்களும் சரியான நேரத்தில் வீடு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் நகரத்தை சுற்றி செல்ல வேண்டும் என்றும் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
