ரஷ்யாவிலிருந்து உடன் வெளியேறுங்கள் - உக்ரைன் பிரஜைகளுக்கு அவசர அறிவிப்பு
ரஷ்யாவில் உள்ள அனைத்து உக்ரைனியர்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உக்ரைனியர்கள் எக்காரணம் கொண்டும் ரஷ்யாவுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும், ரஷ்யாவில் உள்ள உக்ரைன் குடிமக்கள் உடனடியாக ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும்" என்று கூறியுள்ளது.
எச்சரிக்கைக்கு செவிசாய்க்காத குடிமக்களைப் பாதுகாப்பது கடினமாக இருக்கும் என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் இருந்து ரஷ்யா தனது தூதரக அதிகாரிகளை நேற்று திரும்பப் பெற்றது.
இதேவேளை ரஷ்ய பொருளாதாரத்தின் மீது கடுமையான தடைகளை விதிக்கும் வழிகள் குறித்து விவாதிக்க ஐரோப்பிய ஒன்றிய நிதி அமைச்சர்கள் மே 25-26 திகதிகளில் கூடுவார்கள் என்று பிரான்ஸ் நிதி அமைச்சர் புருனோ லு மேயர் தெரிவித்துள்ளார்.
நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய்க்கு காப்பீடு செய்த காப்பீட்டு நிறுவனம் அமெரிக்கத் தடைகள் மற்றும் நிலவும் காலநிலை காரணமாக காப்பீட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்துள்ளது.
உக்ரைனின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் ரஷ்யாவின் அழுத்தத்தை எதிர்கொள்ளவும் பிரிட்டன் 500 மில்லியன் டொலர் கடனுக்கு அனுமதி அளித்துள்ளது.
