கிளிநொச்சி ஊடக அமைய காணியை விடுவிக்க முடியாது! பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டம்
பாதுகாப்பு காரணங்கள் காரணமாக கிளிநொச்சி ஊடக அமையத்தின் காணியினையும் கட்டடத்தினையும் விடுவிக்க முடியாது என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் அறிக்கைக்கு அமைய ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளரால் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி ஏ9 வீதி காக்கா கடைச் சந்தியில் அமைந்துள்ள கிளிநொச்சி ஊடக அமையத்தின் காணியினையும் கட்டடத்தினையும் விடுவித்து தருமாறு கிளிநொச்சி ஊடக இல்லம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை சில மாதங்களுக்கு முன்னர் அனுப்பியிருந்தனர்.
பாதுகாப்பு அமைச்சு
இக்கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் பாதுகாப்பு அமைச்சிடம் பதில் கோரியுள்ளது.

இந்நிலையிலேயே ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (அபிவிருத்தி நிர்வாகம்) W.M.S.P. வீரசிங்கவால் மேற்கண்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2009 இற்கு முன்னர் கிளிநொச்சி ஊடக இல்லமாக செயற்பட்ட குறித்த காணியும் கட்டத்தையும் தற்போது இராணுவத்தினர் பயன்படுத்தி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்தகாணிக்கு ஒரு பறமாகவுள்ள நிலம் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு விடுவிக்கப்பட்ட நிலையில் மறுபுறம் யோகர் சுவாமிகள் நிலையத்திறகும் விடுவிக்கப்பட்ட நிலையில் ஊடக அமையத்தின் காணியும் கட்டடமும் மாத்திரமே விடுவிக்கப்படாத நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |