இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படவுள்ள அரச காணிகள்: அமைச்சரவை அங்கீகாரம்
இராணுவ வீரர்களுக்கு அரச காணிகளை வழங்குவதில் தற்போது பின்பற்றப்படும் முறைமையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை உள்ளடக்கி தற்போதுள்ள முறைமையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இராணுவம், சிறிலங்கா காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் படைவீரர்களுக்கு வசிப்பிடமாக அரச காணிகளை வழங்குவதில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நடைமுறை தொடர்பில் காணி ஆணையாளர் நாயகம் விளக்கமளித்துள்ளார்.
அதன்படி, அமைச்சரவை ஒப்புதலுடன் சுற்றறிக்கை அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அமைச்சரவை அங்கீகாரம்
எவ்வாறாயினும், தற்போது அங்கீகரிக்கப்பட்ட அமைப்பில் படைவீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை என்பதையும், அவர்கள் தற்போது இருந்து வரும் காணிகளுக்கான நிபந்தனைகளுடன் கூடிய சட்ட ஆவணங்களில் உள்ள கட்டுப்பாடான காரணிகள் காரணமாக, அவற்றின் உண்மையான பொருளாதார மதிப்பு காணப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி, குறித்த விடயங்கள் தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க சமர்பித்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |