சீனாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு!
சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் தற்போதுவரை 8 பேர் பலியாகி உள்ளதுடன் 34 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 17-ம் திகதி சீனாவின் தென்மேற்கில் சொங்சிங் (Chongqing) பெங்ஷி நகரில் உள்ள மலைப்பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.
கனமழையின் போது ஏற்பட்ட இந்த நிலச்சரிவைத் தொடர்ந்து மூன்று நாட்களாகக் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 34 பேரை தேடும் பணிக்கு தடையாக இருந்த பெரிய பாறைகளை அகற்ற, மீட்புக் குழுவினர் வெடிபொருட்களைப் பயன்படுத்தி தகர்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சீனாவின் பயங்கர நிலச்சரிவு
இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக சம்பவ இடத்தைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் வரை குடிநீர், மின்சாரம், எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலச்சரிவில் 10-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மண்ணில் புதைந்துள்ளதுடன் மக்களும் மண்ணுக்குள் சிக்கி உள்ளனர்.

நிலச்சரிவில் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகளுக்காக 800-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக சீன பாதுகாப்பு தரப்புக்கள் தெரிவித்துள்ளது.
இதன்படி மேலும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என பாதுகாப்பு தரப்புக்கள் அச்சம் வெளியிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
2 நாட்கள் முன்