பசறை - பதுளை வீதியில் மண்சரிவு : சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக பசறை - பதுளை வீதியின் பிரதான வீதியின் 6ஆம் கட்டை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக அவ்விடத்தினூடான போக்குவரத்து தற்போது ஒற்றை வழிப் போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கடும் பனிமூட்டம்
மேலும், மழை நிலைமையுடன் பசறை மற்றும் லுணுகலை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பல பகுதிகளில் தற்போது கடும் பனிமூட்டம் காணப்படுகிறது.

இதனால் வீதித் தெரிவுத்திறன் குறைந்துள்ளதால், வாகனச் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் மேலதிக சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அந்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் வீதியைச் சீரமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |