மாவட்டங்கள் பலவற்றுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பல மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு முன் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (22.10.2026) இரவு 10 மணி வரை அமுலில் இருக்கும்.
இதன்படி, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை (அம்பர்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவசர நிலை
கண்டி மாவட்டத்தின் உடபலாத்த, மெததும்பர, குண்டசாலை ஆகிய பகுதிகளிலும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பகுதியிலும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, எலபாத்த மற்றும் குருவிட்ட ஆகிய பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு முதலாம் நிலை (மஞ்சள்) எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்களும் வாகன சாரதிகளும் மண்சரிவு, மண் சரிந்து விழுதல் மற்றும் பாறைகள் உருண்டு விழுதல் போன்ற அபாயங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், அவசர நிலை ஏற்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |