காலநிலையில் பாரிய மாற்றம்! மஞ்சள் எச்சரிக்கை விடுவிப்பு
Badulla
Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
2 நாட்கள் முன்
பதுளை பிரதேசத்தில் ஹல்துமுல்ல மற்றும் ஹப்புத்தளை பகுதிகளுக்கு மஞ்சள் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் காரணமாக விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம்
அத்தோடு, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும், வடமேல் மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்