மோசமான வானிலை : தொடர்ந்து நீடிக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் மோசமான வானிலை காரணமாக பதுளை (Badulla) மற்றும் நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் உள்ள ஹாலிஎல, பசறை, கந்தகெட்டிய, பதுளை, ஹப்புத்தளை, மீகஹகிவுல, ஊவாபரணகம மற்றும் சொர்ணா தொட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலகப் பகுதிக்கு நிலை 01 இன் கீழ் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பையும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மண்சரிவு எச்சரிக்கை
இதேவேளை, நாட்டில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
