ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மூட்டை யூரியா உரம் இலவசம்! உறுதியளித்த விவசாய அமைச்சு
Ranil Wickremesinghe
Sri Lanka
Ministry of Agriculture
By pavan
நாட்டில் உள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மூட்டை யூரியா உரம் இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் அறுவடை காலத்தில் விவசாயத்திற்கு தேவையான யூரியா உரமானது ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மூட்டை (50 கிலோ) இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
அகுனுகொலபொலஸவில் நேற்று சனிக்கிழமை (17) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
ரணிலின் அங்கீகாரம்
குறித்த திட்டத்திற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இரண்டரை ஏக்கருக்கும் குறைவான விவசாய நிலங்களைக் கொண்ட விவசாயிகளுக்கு உரம் ஒரு மூட்டை வழங்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி