நள்ளிரவு முதல் லங்கா IOCயின் எரிபொருள் விலையும் அதிகரிப்பு
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (01) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் எரிபொருட்களின் விலையினை அதிகரித்த நிலையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் மற்றும் ஓட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மேற்கொண்ட விலை திருத்தத்திற்கு இணையாக உயர்த்தியுள்ளது.
இதன்படி ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்று10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
சுப்பர் டீசல் விலை
அத்துடன் ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றுக்கு 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 397 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

எவ்வாறாயினும் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 30 ரூபாயினால் குறைக்கப்பட்டு 570 ரூபாயாக விற்பனை செய்யப்படும்.
இதுதவிர அண்மையில் அதிகரிக்கப்பட்ட ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்று மாற்றமின்றி 495 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |