அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு
நாளை (17) முதல் 9 வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
நுகர்வோர் மீதான சுமையைக் குறைக்கும் வகையில், உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக சதொச நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பின்வரும் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன:
புதிய விலை விபரம்

1 கிலோ சோயாவின் (மொத்த விற்பனை) விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 625 ரூபாவாகும்.
நெத்தலி ஒரு கிலோவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 1160 ரூபாவாகும்.
1 கிலோ பாஸ்மதி அரிசியின் புதிய விலை 675 ரூபாவாகும், இது 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
சிவப்பு சீனியின் விலை கிலோ ரூ.350 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை 325 ரூபாவாகவும், கடலை ஒரு கிலோ 555 ரூபாவாகவும், ஒரு கிலோ வௌ்ளைப்பூடு 630 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ சிவப்பு பச்சை அரிசியின் புதிய விலை 147 ரூபாவாக உள்ளதுடன், அதன் விலையை 2 ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.