ஈரானுடனான கடன் மறுசீரமைப்பு : அரசாங்கம் விளக்கம்
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
Iran
Dollars
By Kathirpriya
ஈரானிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனின் ஒரு பகுதி மீள செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2012ம் ஆண்டு ஈரானிடம் எரிபொருள் இறக்குமதி செய்தமைக்காக 250 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த வேண்டியுள்ளது, இந்த தொகையில் 35 மில்லியன் டொலர்களை இலங்கை அரசாங்கம் செலுத்தியுள்ளது.
ஈரான் மீது விதிக்கப்பட்ட சர்வதேச பொருளாதாரத் தடைகள் காரணமாக கடனை மீளச் செலுத்த முடியாமலிருந்த நிலையில், எரிபொருளுக்கான கடனை தேயிலை ஏற்றுமதி மூலம் செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.
பெப்ரவரி மாத இறுதி வரையில் இலங்கை அரசாங்கம் 35 மில்லியன் டொலர் கடனை மீளச் செலுத்தியுள்ளது, அதேபோல், விரைவில் மேலும் பத்து மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட உள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மாலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
வடக்கு கிழக்கை பிரித்த நாள்… ராஜபக்சக்களை விஞ்சியவர்களா ஜேவிபி
2 வாரங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி