வெளிநாடொன்றில் கொடூரமாக தாக்கப்பட்ட இலங்கை பெண்!
இத்தாலியில் இலங்கைப் பெண்ணொருவர் கணவரால் கொடூரமாக தாக்கி கொலை செய்ய முயன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ரோம் நகரில் பிடேன் பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த வாரம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 38 வயதான பெண்ணே படுகாயமடைந்து வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கண்ணாடிப் போத்தல்
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கண்ணாடிப் போத்தலை எடுத்து மனைவியின் தலையில் தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து படுகாயமடைந்த பெண், உடனடியாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்களின் பரிசோதனையில் அவருக்கு மண்டையோட்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன் தற்போது அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் தாக்குதல் நடத்திய கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொலை முயற்சி மற்றும் வன்முறை குற்றச்சாட்டின் கீழ் குறித்த நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
[TTMN7PP ]
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |