முன்னாள் பிரதமர் உட்பட முன்னாள் அமைச்சர்கள் குழுவொன்றுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
ஜனாதிபதி நிதியத்திலிருந்து பெருமளவிலான நிதி உதவியைப் பெற்று, திருப்பிச் செலுத்தாத மூத்த அரசியல்வாதிகள் குழுவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மறுசீரமைப்பு அடிப்படையில் ஜனாதிபதி நிதியிலிருந்து நிதியைப் பெற்று அவற்றைத் திருப்பிச் செலுத்தாதவர்களில் முன்னாள் பிரதமர் ஒருவரும் முன்னாள் மூத்த அமைச்சர்கள் பலரும் அடங்குவதாகக் கூறப்படுகிறது.
குறித்த முன்னாள் பிரதமருக்கு மட்டும் ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 2.9 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
தீர்க்கப்பட்ட கடன்
இதேவேளை, மறுசீரமைப்பு அடிப்படையில் மற்றொரு முன்னாள் அமைச்சருக்கு 1.3 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜனாதிபதி நிதியிலிருந்து பணத்தைப் பெற்று, இதுவரை அந்த நிதியை முறையாக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் ஜெயக்கொடி மட்டுமே திருப்பிச் செலுத்தியுள்ளார்.
அதன்போது, அவருக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து அவருக்கு வழங்கப்பட்ட 6 மில்லியன் ரூபாய் முறையாக தீர்க்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)