இலங்கையில் மற்றுமொரு இயற்கை அதிசயம்! மிகப்பெரிய நிலத்தடி நீர் ஊற்று
மாத்தறை, ஊருபொக்க நகரின் மையப்பகுதியில் உள்ள மனன்கெட்டிய பிரதேசத்தில் மற்றுமொரு இயற்கையான பாரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை உறுதிப்படுத்தி உள்ளது.
தெற்கு மாகாணத்திற்குப் பொறுப்பான NWSDB யின் புவியியலாளர் இந்திரஜித் கமகே, பாஸ்கோடா பிரதேச சபையின் வேண்டுகோளின் பேரில் இந்தப் பெரிய நிலத்தடி நீர் ஆதாரத்தைக் கண்டறிய முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.
மக்களின் குடிநீர் பிரச்சினை
பஸ்கொட பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்டகாலமாக கடும் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

வறட்சி காலத்தில் ஊருபொக்க பகுதியில் உள்ள கிணறுகள் வற்றிப்போவதால், மக்கள் குடிநீருக்காக பவுசர்களை எதிர்பார்க்கும் நிலை உள்ளது.
இந்நிலையில் பஸ்கொட பிரதேச சபையின் கோரிக்கைக்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போதே இந்த பாரிய நீர் ஆதாரம் கண்டறியப்பட்டது.
இதன்மூலம் சுமார் 10,000 குடும்பங்களைச் சேர்ந்த 50,000 க்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது..
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |