ஒரே இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெருந்தொகையான அடையாள அட்டைகள்
Galle
Sri Lanka Police Investigation
By Vanan
காலி - ஒரப்புவத்தையில் உள்ள மாநகர சபை கட்டிட வளாகத்தில் வெற்றுப் பணப்பைகள், தேசிய அடையாள அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுக்கள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட அடையாள அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த மாநகர சபையில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் கட்டிடம் ஒன்றின் கூரைப்பகுதியின் மேல் வளர்ந்துள்ள மரக்கிளையை அகற்றும் போதே இந்த ஆவணங்களை கண்டெடுத்துள்ளனர்.
பேருந்துகள், வீடுகள் போன்ற இடங்களில் திருடப்பட்ட இவற்றை திருடியவர்கள் அப்பகுதியில் எறிந்துவிட்டு சென்றிருக்கலாமென்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்விரிவான மற்றும் பல தகவல்களை இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பில் காண்க,
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி