வெளிநாடொன்றில் கோரவிபத்து பலர் பலி
செனகலில் இடம்பெற்ற விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,100 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இன்று (08) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பேருந்தின் டயர் வெடித்ததால் ஏற்பட்ட விபரீதம்
பயணிகள் பேருந்து ஒன்றின் டயர் வெடித்து எதிர்திசையில் வந்த மற்றொரு பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
செனகல் தலைநகர் டக்கரில் இருந்து தென்கிழக்கே 220 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கஃப்ரின் நகருக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தால் அதிர்ச்சி மூன்று நாட்கள் துக்கம்
மேற்கு ஆபிரிக்க நாடொன்றில் அண்மையில் இடம்பெற்ற மிக மோசமான வாகன விபத்து இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து காரணமாக, திங்கள்கிழமை முதல் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் மேக்கி சவுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
