யாழில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்பு!
By Raghav
யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கேரளா கஞ்சா தொகுதி கிழக்கு ஆழியவளை களப்பு பகுதியில் நேற்றைய தினம் (04.08.2025) மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் ஆழியவளை மற்றும் கட்டைக்காட்டு பகுதி முழுவதும் கடற்படையினரால் ஓர் தேடுதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது ஆழியவளை களப்பு பகுதியில் 30 பொதிகள் அடங்கிய 102 கிலோ 350 கிராம் நிறையுடைய, 23மில்லியனுக்கும் அதிகம் மதிப்புள்ள கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தடன் தொடர்புடைய எந்த சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் மாலை திருவிழா

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி