உலகிலே மிகப்பெரிய வாழைப்பழங்களை உற்பத்தி செய்து பிரமிக்கவைக்கும் நாடு!
பொதுவாக வாழைப்பழங்கள் அனைவராலும் விருப்பப்படும் பழமாகும்.
அந்தவகையில், பப்புவா நியூ கினி எனும் நாட்டில் உலகிலேயே மிகப் பெரிய வாழைப்பழம் உற்பத்தியாகியுள்ளது.
மூசா இன்கென்ஸ் எனும் வாழை மரத்தில் இருந்து இந்த பழம் பறிக்கப்பட்டுள்ளது.
மிகப் பெரிய வாழைப்பழம்
மூசா இன்கென்ஸ் எனும் வாழைமரங்கள் மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது.
இருப்பினும், பப்புவா நியூ கினி எனும் நாட்டிலே மிக உயரமாக இந்த வாழைமரங்கள் வளர்கின்றன.
குறித்த வாழைமரங்கள் 15- 30 மீட்டர் வரை வளர்வதோடு, இதன் வாழை இலைகள் 5 மீட்டர் நீளமும், 1 மீட்டர் அகலமும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த வாழைமரங்களை எல்லா நாடுகளிலும் வளர்க்க முடியாது, இவைகள் மேட்டுப்பகுதியில், பகலில் குளிர்ச்சியான, இரவில் ஈரமான மற்றும் சூடான மிதமான காலநிலை கூடிய இடங்களில் மாத்திரமே வளரக்கூடியது.