கதிரையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட லசந்த - சிசிடிவி காணொளி ஊடாக விசாரணை
புதிய இணைப்பு
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணையைத் தொடங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, நான்கு காவல்துறை குழுக்கள் மூலம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் கித்சிறி ஜயலத் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், சம்பவம் தொடர்பாக இதுவரை எந்தவொரு சந்தேகநபரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர (Lasantha Wickramasekara) நேற்று (22) காலை 10.20 மணியளவில் பிரதேச சபையில் உள்ள அவரது அறையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவரில் ஒருவர் கடிதம் ஒன்றில் கையெழுத்தை பெற்றுக்கொள்வதை போல் பிரதேச சபைத் தலைவரின் அறைக்குள் நுழைந்து அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதன்போது பலத்த காயமடைந்த தலைவர், மாத்தறை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், வெலிகம தலைவர் ஒரு பொது பிரதிநிதி எனினும், அவர் ஒரு பாதாள உலக குற்றவாளி என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அவருக்கு 6 வழக்குகள் உள்ளன. அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையில் உள்ளார். பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என்றார்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு 22 நிமிடங்கள் முன்
