லசந்த விக்ரமதுங்க கொலை சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டார்களா...! வெளியானது அறிவிப்பு
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின்(Lasantha Wickramatunga) கொலையுடன் தொடர்புடைய எந்தவொரு சந்தேக நபரையும் விடுவிக்க சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தவில்லை என்று சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பரிந்த ரணசிங்க(Parinda Ranasinghe) கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
எனினும் லசந்த விக்ரமதுங்கவின் சாரதியைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள், அது தொடர்பான வழக்கிலிருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்டதாக சட்டமா அதிபர் வலியுறுத்தினார்.
லசந்தவின் சாரதி கடத்தல்
இந்த நபர் 2009 ஆம் ஆண்டு தான் கடத்தப்பட்டதாக 2015 ஆம் ஆண்டு காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
அதன்படி, 3 சந்தேக நபர்கள் பெயரிடப்பட்டு அவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன. ஆனால் அவர்கள் மீது வழக்குத் தொடர எந்த ஆதாரமும் இல்லை.
அதன்படி, சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை விடுவிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் எந்த வகையிலும் தொடர்புடையது அல்ல என்று சட்டமா அதிபர் உறுதியாகக் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)