மீண்டும் தூசு தட்டப்படும் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை விவகாரம்
CID - Sri Lanka Police
Anura Kumara Dissanayaka
Sri Lanka
Journalists In Sri Lanka
By Raghav
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய விசாரணைளை குற்றப்புலனாய்வு திணைக்களம் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு மேலதிகமாக புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
புலனாய்வுத் திணைக்களம்
2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி இரத்மலானையில் சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டார்.
தமது காரில், அலுவலகம் நோக்கி பயணித்த போது அவர் கொலை செய்யப்பட்டார்.
ஊடகவிலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சட்ட மாஅதிபருக்கு அனுப்பி வைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 16 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்