பல அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வந்த லசந்த விக்ரமதுங்கவின் 15ம் ஆண்டு நினைவுதினம்
இலங்கை அரசினதும் பல அரசியல்வாதிகளினதும் உண்மை முகங்களை வெளிக்கொண்டு வந்த பிரபலமான ஊடகவியலாளரான லசந்த விக்கிரமதுங்கவின் 15 ஆவது நினைவு தினம் இன்றாகும்
குற்றவாளி சமூகத்தில் எந்தவொரு நிலையில் இருந்தாலும் பின்வாங்காமல் தனது பத்திரிகையூடாக லசந்த விக்கிரமதுங்க தைரியமாக வெளிப்படுத்தினார்.
அரசுக்கெதிராகவும் பல அரசியல்வாதிகள் தொடர்பாகவும் ஆயுதக் குழுக்கள் தொடர்பாகவும் மிக நீண்டகாலமாக மிகக் கடுமையான கட்டுரைகளை வெளியிட்டு வந்ததால் இவர் பல ஆண்டுகளாக தொடர்ந்து கடுமையான அச்சுறுத்தல்களுக்குள்ளாகி வந்திருந்தார்.
படுகொலை தினம்
இவ்வாறான குழலிலிலும் உயிர் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் செயற்பட்டுவந்த லசந்த விக்கிரமதுங்க, கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி கொழும்பின் புறநகரான அத்திட்டிய பகுதியில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.
இவரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பலர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட போதிலும் இன்னும் இந்தக் கொலைக் குற்றத்திற்கு நீதி கிடைக்கப்படவில்லை
மக்களுக்காக செயற்பட்ட லசந்த விக்கிரமதுங்கவின் ஊடக சேவையை கொளரவிக்கும் வகையில் ஊடக சுதந்திரத்திற்கான யுனெஸ்கோவின் குயிலமோ கேனோ விருது மற்றும் NATIONAL PRESS CLUP, PRESS FREEDOM விருது ஆகிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.
அத்துடன் இவர் கொல்லப்பட்ட பின்னரும் International Press Institute World Press Freedom Heroes விருது வழங்கப்பட்டு சர்வதேசத்தினால் கௌரவிக்கப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |