தமிழர் பகுதியில் கிணற்றுக்குள் இருந்து வரும் மண்ணெண்ணெய்!

Sri Lanka Police Mullaitivu Sri Lanka Police Investigation Liberation Tigers of Tamil Eelam
By Shadhu Shanker Jan 08, 2024 06:21 AM GMT
Report

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு குரவில் கிராமத்தில் உள்ள கிணற்றுக்குள் இருந்து கிணற்று நீருடன் மண்ணெண்ணெய் வெளியேறி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த விடயம் நேற்று (07) கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குரவில் கிராமத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்று மழை வெள்ளத்தினால் கிணறுக்குள் வெள்ள நீர் நிரம்பியுள்ள நிலையில் கிணற்றினை சுத்தம் செய்வதற்காக நீர் இறைக்கும் இயந்திரம் கொண்டு இறைத்துள்ளார்கள்.

தங்க குவியலின் மீது கட்டப்பட்டுள்ள நகரம்: விண்வெளியில் இருந்து வந்த புகைப்படம்

தங்க குவியலின் மீது கட்டப்பட்டுள்ள நகரம்: விண்வெளியில் இருந்து வந்த புகைப்படம்

கிணற்று நீரில் மண்ணெண்ணெய்

இதன்போது கிணற்று நீருடன் மண்ணெண்ணெய் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் கிராமத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர் பகுதியில் கிணற்றுக்குள் இருந்து வரும் மண்ணெண்ணெய்! | Kerosene From The Well Mullaitivu Udaiyar Kattu Sl

கிணற்று நீரின் மேற்படலம் மண்ணெண்ணெய்யாக காணப்பட்ட நிலையில் வாளியால் தண்ணீரை அள்ளி அதில் ஒரு இலையினை நனைத்து அதனை பற்றவைத்தபோது அந்த இலை எரிந்துள்ளது.

யாழில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த பிரபல மருந்தகம் ஒன்றின் ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது

யாழில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த பிரபல மருந்தகம் ஒன்றின் ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது

விடுதலைப்புலிகள் காலம்

இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர்கள் கிராம சேவையாளருக்கு தொடர்பினை ஏற்படுத்தி தெரியப்படுத்தியுள்ளதுடன் கிராம சேவையாளர் ஊடாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் கிணற்றுக்குள் இருந்து வரும் மண்ணெண்ணெய்! | Kerosene From The Well Mullaitivu Udaiyar Kattu Sl

சம்பவ இடத்திற்கு வருகை தந்த புதுக்குடியிருப்பு காவல்நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர்கள்  கிணற்றினை பார்வையிட்டுள்ளதுடன் கிணற்றின் எண்ணெய் கலந்த நீரின் மாதிரியினை எடுத்து சென்றுள்ளனர்.

அத்தோடு இது தொடர்பில் முறைப்பாடு பதிவுசெய்து சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

இது குறித்து அயலவர்களை விசாரித்தபோது காணிக்கு அருகில் விடுதலைப்புலிகள் காலத்தில் விடுதலைப்புலிகளின் முகாம் ஒன்று காணப்பட்டுள்ளதாகவும் அந்த காலத்தில் நிலத்தில் புதைக்கப்பட்ட மண்ணெண்ணெய் கசிந்து தற்போது நிலத்தடி நீரில் கலந்துள்ளதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என தெரிவித்துள்ளார்கள்.

பொதுமக்களின் சிரமம்

தற்போது நிலத்தடி நீர்மட்டம் உயரமாக காணப்படுவதால் தொடர்ச்சியாக இறைத்து நீர் வரத்து பகுதியினை கண்டறியமுடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

தமிழர் பகுதியில் கிணற்றுக்குள் இருந்து வரும் மண்ணெண்ணெய்! | Kerosene From The Well Mullaitivu Udaiyar Kattu Sl

இது தொடர்பில் காணி உரிமையாளர்களை கேட்டபோது, 2012 ஆம் ஆண்டு மீள்குடியேறிய பின்னர் குறித்த கிணற்றை கட்டியதாகவும் தற்போது கிணற்றினை சுத்தம் செய்யும் போது நீர் கருநிறத்தில் காணப்பட்டதாகவும் பின்னர் நீரில் மண்ணெண்ணெய் மணக்கத்தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.  

மேலும், தங்கள் குடிநீர் மற்றும் வீட்டுதேவைக்காக பயன்படுத்தி வந்த கிணற்றில் மண்ணெண்ணெய் கலந்ததால் குடிநீரினை பெற்றுக்கொள்வதற்கும் ஏனைய தேவைகளுக்கும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி