லாஃவ் எரிவாயு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு
Litro Gas
LAUGFS Gas PLC
By Vanan
லாஃவ் சமையல் எரிவாயு
லாஃவ் சமையல் எரிவாயு நிறுவனம் தமது விலையில் எந்தவொரு மாற்றத்தையும் மேற்கொள்ளப் போவதில்லையென கூறியுள்ளது.
தற்போதுள்ள விலையில் தொடர்ந்தும் சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயு
இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 250 ரூபாவினாலும், 5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 100 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 45 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
விலை சூத்திரத்தின்படி இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி