விலை குறைப்பு தொடர்பில் எரிவாயு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு..!
Sri Lanka Economic Crisis
LAUGFS Gas PLC
Laugfs Gas Price
By Kanna
லாஃப் சமையல் எரிவாயு விலை அடுத்த மாதம் மேலும் குறைக்கப்படும் என அக்குழுமத்தின் தலைவர் W.K.H வகபிட்டிய தெரிவித்துள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு பின்னர் கடந்த வாரம் 12.5 கிலோ எடை கொண்ட லாஃப் எரிவாயுவின் விலை 1050 ரூபாவால் குறைக்கப்பட்டது.
மீண்டும் அதே அளவில் குறைக்கப்படும்
இந்நிலையில், அடுத்த மாதமும் அதே அளவு விலை குறைக்கப்படும் என லாஃப் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
12.5 கிலோ எடை கொண்ட லாஃப் எரிவாயு சிலிண்டரின் தற்போதைய விலை 5,800 ரூபாவாகவும், 5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 2,320 ரூபாவாகவும், 2.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 928 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 12 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி