சடுதியாக பெரும் தொகையை விலை குறைப்பு செய்த எரிவாயு நிறுவனம்..!
12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 1050 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் புதிய விலை 5,800 ரூபா ஆகும்.
இதேவேளை, 5 கிலோ கிராம் கொள்கலன் 2320 ரூபாவாகவும், 2 கிலோ கிராம் கொள்கலன் 928 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.
இன்று முதல் குறித்த விலை குறைப்புகள் நடைமுறைக்கு வரும் என லாஃப் நிறுவனம் அறிவித்துள்ளது.
விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாட்டிற்கு நேற்றைய தினம் வந்த கப்பலில் தரையிறக்கப்பட்ட எரிவாயு இன்றைய தினம் முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படும் லாஃப் நிறுவனம் இன்று காலை அறிவித்திருந்தது.
3000 மெற்றிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல் நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்தது.
அந்த கப்பலிலிருந்த எரிவாயு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட பின்னர், அதனை தரையிறக்கும் பணிகள் நேற்று மாலை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
