செவ்வந்தியின் தாயார் சிறையில் உயிரிழப்பு
கணேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் கடந்த 11 ஆம் திகதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேடப்பட்டு வரும் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் மற்றும் சகோதரர் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடு சென்ற அதிகாரிகளுக்கு ஏமாற்றம்
இதற்கிடையில், கெஹல்பத்தர பத்மே, அவரது தோழர் மற்றும் கமாண்டோ சாலிந்தா ஆகியோர் மலேசியாவில் இருந்து தாய்லாந்திற்கு படகு மூலம் தப்பிச் செல்லும்போது கடந்த 9 ஆம் திகதி மலேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
பின்னர், இலங்கை காவல்துறையும் இந்த செய்தியை உறுதிப்படுத்தியது, பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவை அந்த நாட்டிற்கும், மற்றொரு அதிகாரிகள் குழுவை தாய்லாந்திற்கும் அனுப்பி அவர்களை மீண்டும் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இருப்பினும், கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட மூவரும் மலேசிய காவல்துறை காவலில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.
இதன்படி, அவர்களை அழைத்து வரச் சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நாளை நாடு திரும்ப உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
