லாஃப்ஸ் எரிவாயு நிறுவன அதிகாரியின் காரை வழிமறித்த மக்கள்
எரிவாயு விலையை உயர்த்தியமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு லாப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் லாப்ஸ் எரிவாயு நிறுவன அதிகாரியின் காரை வழிமறித்து மக்கள் விளக்கம் கோரிய சம்பவம் பதிவாகி உள்ளது.
இந்த விலை அதிகரிப்பு தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் இன்றைய தினம், நுகர்வோர் விவகார அதிகாரசபையில் முன்னிலையாகுமாறு லாப்ஸ் நிறுவன அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து லாப்ஸ் நிறுவன அதிகாரிகள் இன்று (16) நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு வருகை தந்த நிலையில் பொது மக்கள் சிலர் லாப்ஸ் எரிவாயு சிலிண்டருடன் வருகை தந்திருந்தனர்.
3 மணிக்கும் விலை குறைக்கப்படும்
இதன்போது பொது மக்கள் நிறுவனத் தலைவரின் காரை வழிமறுத்து அதன் கதவை திறந்த எரிவாயு விலை குறைக்கப்படுமா என்று பலவந்தமாக கேட்ட நிலையில் அவர் அது பதிலளிக்கையில் தெரிவித்தாவது இன்று மூன்று மணிக்கும் விலை குறைக்கப்படும் என தெரிவித்தார்.

அச்சந்தர்ப்பத்தில் சிறு குழப்பகரமாண சூழல் ஏற்பட்டு பதற்றமும் நிலவியது. கடந்த 13ஆம் திகதி முதல் லாப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது. 12.5 கிலோ கிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 1775 ரூபாவினால் உயர்த்தப்பட்டது.
சர்வதேச சந்தையில் எரிவாயு விலை உயர்வு, கப்பல் கட்டண அதிகரிப்பு, காப்புறுதி கட்டண அதிகரிப்பு போன்ற காரணிகளினால் விலை உயர்த்தப்படுவதாக லாப் நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்த விலை ஏற்றத்தின் ஊடாக மேலதிக வருமானத்தை எதிர்பார்க்கவில்லை என நிறுவனத்தின் பணிப்பாளர் நளிந்த குருகுலசூரிய தெரிவித்திருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |