லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்
இலங்கையில் நிலவும் லாஃப்ஸ் சமையல் எரிவாயு (LAUGFS Gas) தட்டுப்பாடு விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஹம்பாந்தோட்டை (Hambantota) துறைமுகத்திலிருந்து முதற்தடவையாக கப்பலிலிருந்து கப்பலுக்குத் திரவப் பொருட்களைப் பரிமாற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் (Singapore) நிறுவனம் ஒன்றுடன் இணைந்து லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனத்தின் கப்பலுக்கு இந்த திரவ வாயு பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.
திரவ எரிவாயு
இதன்படி, லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனத்துக்கு 3,170 மெட்ரிக் தொன் திரவ எரிவாயு அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு விரைவில் நிவர்த்திக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாடு முழுவதும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், வீடுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் 3,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை, மாதாந்த அடிப்படையில் விநியோகம் செய்வதை உறுதி செய்யுமாறு அண்மையில் ஜனாதிபதி பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |