லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு
பண்டிகைக் காலத்தில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விநியோகம் குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது
அதன்படி, குறித்த காலப்பகுதியில் லாஃப்ஸ் எரிவாயுவினை தட்டுப்பாடின்றி நுகர்வோருக்கு வழங்கும் நடவடிக்கைகள் இன்று (08) முதல் ஆரம்பிக்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வர்த்தக அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய, அது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து நிறுவனத்திற்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
லாஃப்ஸ் எரிவாயு கப்பல்
7,000 மெட்ரிக் தொன் லாஃப்ஸ் எரிவாயுவை ஏற்றிய கப்பல் கடந்த 6ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்ததாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது.

குறித்த எரிவாயு கையிருப்பினை லாஃப்ஸ் நுகர்வோருக்கு இன்று முதல் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சுற்றிவளைப்புகள் மற்றும் விசாரணைகளை முன்னெடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.