எரிவாயு விநியோகம் தொடர்பி்ல் வெளியாகியுள்ள மகிழ்ச்சியான தகவல்!
sri lanka
people
gas
litro
Distribution
laugfs
By Thavathevan
நாட்டில் எரிவாயு விநியோகம் இன்று முதல் வழமைக்கு திரும்பும் என அரச தலைவர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு எரிவாயுவை ஏற்றி வந்துள்ள கப்பல்களுக்கான நிதி நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, எரிவாயுவைத் தரையிறக்கி, விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படும்.
எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு தீர்க்கப்படும் என ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்கள் எரிவாயு விநியோகத்தை நேற்று முதல் இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி